தொழிலாளி சாவு


தொழிலாளி சாவு
x

திருவோணம் அருகே தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தஞ்சாவூர்

திருவோணத்தை அடுத்துள்ள வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கொல்லைக்காடு மில்லுதெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் கருப்பையன் (வயது36). கூலித்தொழிலாளி. இவருக்கு கலாவதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கருப்பையன் கடந்த மாதம் 28-ந்தேதி தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இவரை பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 2-ந்தேதி கருப்பையன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கலாவதி கொடுத்த புகாரின் பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story