தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
மூலைக்கரைப்பட்டி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள தெய்வநாயகப்பேரி பேங்க் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை மகன் பாலகிருஷ்ணன் (வயது 32). கூலி தொழிலாளி. இவருக்கு மாலதி (30) என்ற மனைவியும், அபி (9) என்ற மகளும், ஜெயராமன் (7) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாலதி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் விரக்தியில் இருந்து வந்த பாலகிருஷ்ணன் சம்பவத்தன்று விவசாயத்துக்கு வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மயங்கி கிடந்த பாலகிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில் பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.