குண்டர் சட்டத்தில் தொழிலாளி கைது
குண்டர் சட்டத்தில் தொழிலாளி கைது
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
பூதப்பாண்டி அருகே உள்ள அருமநல்லூரை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 41), தொழிலாளி. இவர் தற்போது திருவட்டார் தாலுகா மணலிக்கரை அருகே உள்ள அண்டம்பாறையில் வசித்து வருகிறார். இவர் மீது திருவட்டார் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இந்த நிலையில் போலீசாரின் எச்சரிக்கையை மீறி பாக்கியராஜ் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதற்கான அனுமதி கோரி கலெக்டர் ஸ்ரீதருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹாிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் அனுமதி அளித்ததை தொடர்ந்து பாக்கியராஜை திருவட்டார் போலீசார் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதன் மூலம் குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story