குண்டர் சட்டத்தில் தொழிலாளி கைது


குண்டர் சட்டத்தில் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குண்டர் சட்டத்தில் தொழிலாளி கைது

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கன்னியாகுமரி கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55), தொழிலாளி. இவர் மீது கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இந்த நிலையில் போலீசாரின் எச்சரிக்கையை மீறி செல்வராஜ் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அரவிந்துக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டர் அனுமதி அளித்ததை தொடர்ந்து செல்வராஜை கன்னியாகுமரி போலீசார் நேற்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செல்வராஜையும் சேர்த்து குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு மொத்தம் 71 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story