சிறந்த தமிழ்நாட்டை உருவாக்க கடுமையாக உழைக்க வேண்டும் : கவர்னர் ஆர்.என்.ரவி


சிறந்த தமிழ்நாட்டை உருவாக்க கடுமையாக உழைக்க வேண்டும் : கவர்னர் ஆர்.என்.ரவி
x

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிப்பாய் புரட்சியில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

வேலூர்,

இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட முதல் சிப்பாய் புரட்சி வேலூர் கோட்டையில் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ந் தேதி நடந்தது. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக நடந்த இந்த புரட்சியில் ஏராளமான இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் நினைவாக வேலூர் கோட்டை அருகே உள்ள மக்கான் சந்திப்பில் சிப்பாய் புரட்சி நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் 10-ந் தேதி வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு 216-வது சிப்பாய் புரட்சி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காலை 10 மணியளவில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம், நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறறது. இதில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிப்பாய் புரட்சியில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதனப்பினர் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது ;

இந்திய சுதந்திர போருக்கு முதல் முதலில் வித்திட்ட 1806 ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சி வேலூரில் தான் துவங்கியது. இந்தியா உலக நாடுகளுக்கே வழிகாட்டியாக மாறி வருகிறது.`தமிழ் மக்கள் போல தமிழில் பேச வேண்டும் என்பது தான் விருப்பம். சாதி, மதம் கடந்து அனைத்துத் தரப்பு மக்களும் சிப்பாய் புரட்சியில் பங்கேற்றனர்.சிறந்த பாரதம் ,சிறந்த தமிழ்நாட்டை உருவாக்க கடுமையாக உழைக்க வேண்டும்.தமிழ் மிகவும் பழமையான மொழி சக்திவாய்ந்த மொழி நிச்சயம் ஒருநாள் தமிழில் பேசுவேன்.வேலுநாச்சியார்,கட்டபொம்மன் ,மருதுபாண்டியன் போன்ற போராட்ட வீரர்கள் இம்மண்ணில் இருந்த்துள்ளனர்.சிப்பாய் புரட்சி என்பது சடங்கு சம்பிரதாயத்திற்காக நடக்கவில்லை சுதந்திரத்திற்காக நடந்தது.ஆங்கிலேயர்கள் வருவதற்க்கு முன் நாம் கல்வியில் சிறந்து விலங்கினோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story