பாப்பிரெட்டிப்பட்டியில் டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகை


பாப்பிரெட்டிப்பட்டியில் டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகை
x

பாப்பிரெட்டிப்பட்டியில் வேறு இடத்துக்கு மாற்றகோரி டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி

டாஸ்மாக் கடை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு மதுபாட்டில்களை வாங்கும் மதுப்பிரியர்கள் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மது குடிப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் பலமுறை ேகாரிக்கை விடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் கடையை அந்த இடத்தில் இருந்து மாற்றக்கோரி மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதி பெண்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் மனு குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

முற்றுகை

இதனை தொடர்ந்து நேற்று மதியம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடையை திறக்கவிடாமலும் கடையை வேறு இடத்துக்கு மாற்றகோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மஞ்சுளா, சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர் நித்யா உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரபரப்பு

அதில் ஒரு மாதத்திற்குள் டாஸ்மாக் கடை வேறு இடத்துக்கு மாற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த பெண்கள் முற்றுகையை ஈடுபட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story