"இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் மகளிர் உரிமைத் திட்டம்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் மகளிர் உரிமைத் திட்டம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 10 Nov 2023 1:57 PM IST (Updated: 10 Nov 2023 2:00 PM IST)
t-max-icont-min-icon

நம்மால் இதை செய்ய முடியாது என்றவர்கள் கூட நம்மை பின்பற்றி தேர்தல் வாக்குறுதி தருகிற அளவுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் சாதனைப் படைத்து வருகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான மகளிருக்கு தலா ரூ.1000 வழங்கும் 2-வது கட்ட திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கிவைத்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் கூறி இருப்பதாவது;

"'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' மூலம் முதற்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிர் பயனடைந்து வரும் நிலையில், புதிதாக இணைந்துள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிருக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சியை மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கி வைத்த நிகழ்வில் பங்கேற்றோம்.

நம்மால் இதை செய்ய முடியாது என்றவர்கள் கூட நம்மை பின்பற்றி தேர்தல் வாக்குறுதி தருகிற அளவுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் சாதனைப் படைத்து வருகிறது.

இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 ஆக உயர்ந்ததில் மகிழ்ச்சி கொள்கிறோம். இத்திட்டத்தில் புதிதாக இணைந்துள்ள சகோதரிகளுக்கு என் அன்பும், வாழ்த்தும்." இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story