மகளிர் உரிமை தொகை திட்ட முகாமை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


மகளிர் உரிமை தொகை திட்ட முகாமை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்ட முகாமை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

திருவெண்காடு;

மயிலாடுதுறை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்ட முகாமை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்துக்கு 291 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று பூம்புகார் அருகே உள்ள காவேரி பூம்பட்டினம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள முகாமை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாநில சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஆணையருமான அமுதவல்லி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அடிப்படை வசதிகள்

அப்போது அவர் பணியில் இருந்த அதிகாரிகளிடம் பயனாளிகள் பெயா் விடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் முகாமுக்கு வருகை தரும் பெண்களுக்கு செய்துள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது கலெக்டர் மகாபாரதி, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுவரேகா, கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் தயாளன் விநாயகம் அமுல்ராஜ், ஒன்றிய ஆணையர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், தாசில்தார் செந்தில்குமார், ஊராட்சி தலைவர் சசிகுமார் ஆகியோர் இருந்தனர். தொடர்ந்து மணிக்கிராமம், காளஹஸ்திநாதபுரம், செம்பனார்கோவில், உளுத்துகுப்பை, மொழியூர் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் முகாம்களை கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காலகஸ்திநாதபுரம்

இதைப்போல காளகஸ்தினாதபுரம் ஊராட்சி, செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட மாதிரி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களை, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆணையருமான அமுதவல்லி, மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது முகாமிற்கு தேவையான பயோ மெட்ரிக் கருவிகள் உள்ளனவா என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.மேலும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக அறிந்துள்ளனரா என்பதனை முகாம் அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.ஆய்வின் போது மயிலாடுதுறை துணை கலெக்டர் யுரேகா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள வினாயகன் அமல்ராஜ், உதவி இயக்குனர் ஊராட்சிகள் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார், ஊராட்சி தலைவர்கள் விஸ்வநாதன், ஜோதிவள்ளி, காளஹஸ்தினாதபுரம் ஊராட்சி துணை தலைவர் சரவணன் மற்றும் பலா் இருந்தனர்.


Next Story