உரிமைத்தொகை மேல்முறையீடு செய்ய இ-சேவை மையங்களில் 2-வது நாளாக குவிந்த பெண்கள்


உரிமைத்தொகை மேல்முறையீடு செய்ய இ-சேவை மையங்களில் 2-வது நாளாக குவிந்த பெண்கள்
x

நெல்லையில் உரிமைத்தொகை மேல்முறையீடு செய்ய இ-சேவை மையங்களில் 2-வது நாளாக பெண்கள் குவிந்தனர்.

திருநெல்வேலி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கடந்த 15-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 35 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதில் தகுதி இருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் https://kmut.tn.gov.in என்ற புதிய இணையதளம் ஒன்றை தமிழக அரசு தொடங்கி உள்ளது. இந்த புதிய இணையதளம் மூலம் மகளி உரிமைத் தொகை தனக்கு எதனால் கிடைக்கவில்லை என்பதை தாங்களாகவே தெரிந்து கொள்ளலாம். அதாவது அந்த இணையதளத்தில் செல்போன் எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பத்தின் நிலையை அறிய முடியும். மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தில் கொடுத்த ஆதார் எண்ணை பதிவிட்டாலும் தகவல் கிடைக்கும். காரணம் அறிந்த பின்னர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் நேற்று முன்தினம் நெல்லை கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையத்தில் பெண்கள் குவிந்தனர். அவர்கள் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்தனர். நேற்றும் 2-வது நாளாக பெண்கள் குவிந்து மேல்முறையீடு செய்தனர்.


Next Story