கலைஞர் உரிமை தொகை வழங்கவில்லை என கூறி பெண்கள் மறியல்
தகுதியுடையவர்களுக்கு கலைஞர் உரிமை தொகை வழங்கவில்லை என கூறி ஒரத்தநாட்டில் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகுதியுடையவர்களுக்கு கலைஞர் உரிமை தொகை வழங்கவில்லை என கூறி ஒரத்தநாட்டில் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலைமறியல்
ஒரத்தநாட்டை அடுத்துள்ள சோழபுரம் ஊராட்சிக்குட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் தமிழக அரசின் கலைஞர் உரிமை தொகை தகுதியுடையவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலை சோழபுரத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் கலைஞர் உரிமைத்தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.