பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்


பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2023 6:45 PM (Updated: 22 Jun 2023 6:46 PM)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் தலைமை தாங்கினார். சாரதா ஆசிரமத்தை சேர்ந்த யத்தீஸ்வரி நித்திய விவேக பிரியா அம்பா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உளுந்தூர்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் ராஜவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான வாழ்க்கை மேம்பாடு குறித்து விளக்கி பேசினார். இதில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர் கதிரவன், உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலைய போலீசார் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story