கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு
ஜோலார்பேட்டை அருகே கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டையை அடுத்த அடியத்தூரில் காணும் பொங்கல் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் காலையில் கொடியேற்றப்பட்டது. கன்னிப் பெண்கள் கோவில் முன்பு பொங்கல் பொங்கல் வைத்து, ஆடு, கோழி போன்றவற்றை பலியிட்டு அம்மனை வணங்கினர். மேலும் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம், தீச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். காத்து, கருப்பால் பாதிக்கப்பட்டவர்கள் சாலையில் படுத்துக் கொள்ள, தீச்சட்டி ஏந்தி வரும் பக்தர்கள் அவர்கள் மீது மிதித்துச் சென்றனர். இதனால் அவர்களை பிடித்த காற்று கருப்புகள் ஓடி விடுவதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story