வீடுகள்தோறும் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு


வீடுகள்தோறும் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு
x

நொய்யல் பகுதியில் 2-ம் நாளாக வீடுகள்தோறும் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு

கரூர்

நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள அத்தியம்மா விநாயகர் கோவிலில் நேற்று தீபத் திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு கூம்பு தீபம் கொளுத்தப்பட்டது. இதேபோல் முத்தனூர், கரைப்பாளையம், சேமங்கி, நொய்யல் குறுக்கு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் கார்த்திகை தீபம் 2-ம் நாளை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள் தோறும் 2-ம் நாளாக பெண்கள் 48 அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் வீடுகளில் உள்ள சாமி படங்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.


Next Story