மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவேற்ற பயிற்சி முகாம்
அம்பையில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவேற்ற பயிற்சி முகாம் நடந்தது.
திருநெல்வேலி
அம்பை:
அம்பை தாலுகா அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்கும் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிக்கான பயனாளிகளின் விபரங்களை பதிவேற்றம் செய்யும் பணிக்காக பயிற்சி முகாம் நடைபெற்றது. தாசில்தார் சுமதி தலைமை தாங்கினார். துணை தாசில்தார் செல்லத்துரை முன்னிலை வகித்தார். இல்லம் தேடிக்கல்வி அம்பை வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஆபேல் சேத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். இதில் அம்பை ஒன்றியத்தை சார்ந்த இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் 91 பேர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story