தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்


தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
x

உரிமைத்தொகை வழங்க கோரி காரியாபட்டி தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

உரிமைத்தொகை வழங்க கோரி காரியாபட்டி தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

மகளிர் உரிமைத்தொகை

காரியாபட்டி தாலுகாவில் காரியாபட்டி, மல்லாங்கிணறு ஆகிய 2 பேரூராட்சிகளும், 150-க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. தமிழக அரசால் தற்ப

காரிோது அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சில நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. இதனால் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத அந்தந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் காரியாபட்டி தாலுகா அலுவலகத்திற்கு தினமும் வந்து உரிமைத்தொகை கேட்டு அழைத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பெண்கள் உரிமைத்தொகை கேட்டு தாலுகா அலுவலகம் வந்தனர்.

தாலுகா அலுவலகம் முற்றுைக

இதுகுறித்து காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காரியாபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டி மற்றும் போலீசார் தாலுகா அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காரியாபட்டி தாசில்தார் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக அரசின் விதிகளுக்கு உட்பட்டு அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.



Next Story