வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்


வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
x

100 நாட்கள் வேலை வழங்கக்கோரி வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்

கணவாய்ப்பட்டி ஊராட்சி ஆசிரமம் பகுதியை சேர்ந்த பெண்கள், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தில் கூடுதலாக 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து கூடுதலாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி செயலர் உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து பெண்கள் கலைந்து சென்றனர்.


Next Story