விபத்தில் பெண் சாவு
மோகனூர் அருகே விபத்தில் பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மோகனூர்
மோகனூர் அருகே உள்ள ஆரியூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மனைவி காமாட்சி (வயது 48). இவர் கடந்த 1-ந் தேதி தனது மகன் தர்ஷனுடன் மோட்டார் சைக்கிளில் மோகனூர் சென்றுவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக தர்ஷன் தனது மோட்டார் சைக்கிளை சாலை ஓரமாக சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து கிடந்தனர். அதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக காமாட்சியை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்று காமாட்சி உயிரிழந்தார். இதுகுறித்து மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்கை சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.