பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி


பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
x

வந்தவாசியில் பஸ் சக்கரத்தில் சிக்கி மகன் கண் எதிரே பெண் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த சளுக்கை கிராமத்தை சேர்ந்தவர் சூரியசந்திரசேகர் (வயது 53). இவரது மனைவி சரஸ்வதி (40). இவர்களுக்கு கவுதமன் (21) என்ற மகனும், ஜானகி (18) என்ற மகளும் உள்ளனர்.

இவர்கள் வந்தவாசி ஒற்றைவாடை செட்டித் தெருவில் வசித்து வருகின்றனர்.

சரஸ்வதி 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவதற்காக கவுதமனுடன் மோட்டார்சைக்கிளில் சளுக்கை கிராமத்துக்கு இன்று காலை சென்று கொண்டிருந்தார்.

வந்தவாசி கோட்டை மூலை அருகில் செல்லும் போது பின்னால் வந்த தனியார் பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சரஸ்வதி பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் விரைந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த கவுதமன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகன் கண்ணெதிரே தாய் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story