ஆட்டோ கவிழ்ந்து பெண் சாவு


ஆட்டோ கவிழ்ந்து பெண் சாவு
x

பாப்பாக்குடி அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் இறந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

திருநெல்வேலி

முக்கூடல்:

பாப்பாக்குடி அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் இறந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

ஆட்டோ கவிழ்ந்தது

பாப்பாக்குடி அருகே இடைகாலில் இருந்து ஆலங்குளம் நோக்கி நேற்று மதியம் பயணிகள் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வெள்ளப்பனேரி பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் பரமசிவன் (வயது 51) என்பவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றார்.

இடைகால் விலக்கை கடந்து சென்றபோது ஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்தவர்களில் அணைந்தநாடார் பட்டியை சேர்ந்த தளவாய் நாடார் மனைவி பிச்சலட்சுமி (வயது 55) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறிது நேரத்தில் பிச்சலட்சுமி இறந்தார்.

மேலும் ஒருவர் காயம்

மேலும் இந்த விபத்தில் முக்கூடல் அருகே உள்ள சடையப்பபுரம் ராமலிங்க நகரை சேர்ந்த கணேசன் (52) என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. எனவே அவர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story