பெண் தூக்குப் போட்டு தற்கொலை


பெண் தூக்குப் போட்டு தற்கொலை
x

ஆற்காட்டில் பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு அண்ணா நகர் மாசாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி கனகா (29). கனகாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கனகா நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியல் தூக்குபோட்டுக் கொண்டுள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கனகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story