பெண் விஷம் குடித்து தற்கொலை
சங்கரன்கோவில் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள கண்டிகைப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரதுரை மனைவி ஜெயலட்சுமி (வயது 35). இந்த தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஜெயலட்சுமி வீட்டில் விஷம் குடித்து மயங்கி இருந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கரிவலம்வந்தநல்லூர் போலீசார், ஜெயலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story