பெண் விஷம் குடித்து தற்கொலை
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா கீழ்மின்னல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி மல்லிகா (வயது 50). இவர், கடந்த 10 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு, சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மேனலூர் கிராமத்தில் உள்ள அவரது அண்ணன் மனோகரன் வீட்டின் சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மல்லிகா சென்றிருந்தார்.
மறுநாள் காலையில் வயிற்று வலி அதிகமாக இருந்ததால் மல்லிகா பூச்சி மருந்து (விஷம்) குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.