குண்டர் சட்டத்தில் பெண் கைது


குண்டர் சட்டத்தில் பெண் கைது
x

சாராயம் விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த மஷார் கிராமத்தை சேர்ந்த கார்த்தி என்பவரது மனைவி சாந்தி (வயது 31). இவர், சாராயம் விற்றதாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுக்க குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதைத் தொடர்ந்து சாந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.


Next Story