சாராயம் விற்ற பெண் கைது
சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர்
வேப்பந்தட்டை:
சாராய விற்பனை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெள்ளுவாடி பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் வெள்ளுவாடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வெள்ளுவாடி சோலை நகரில் ஒரு பெண் சாராயம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர், கடலூர் மாவட்டம் கொரக்கவாடி குடிக்காடு கிராமத்தை சேர்ந்த கனகவள்ளி(வயது 49) என்பது தெரியவந்தது.
கைது
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகவள்ளியை கைது செய்து, அவரிடம் இருந்து 3 லிட்டர் அளவிலான சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி அழித்தனர். மேலும் கனகவள்ளியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story