தூய்மை பணியாளர்களின் போராட்டம் வாபஸ்


தூய்மை பணியாளர்களின் போராட்டம் வாபஸ்
x

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் வாபஸ் பெற்றனர்.

நாமக்கல்

நாமக்கல் - மோகனூர் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி இரவு 25-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்தபடி தினசரி ஊதியமாக ரூ.620 வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்ததற்கான கார்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஸ்பத்திரி வளாகத்தில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களின் போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. இவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது உங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும். தற்போது போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என கூறினர். இதை ஏற்றுக்கொண்டு தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story