ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா


ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா
x
தினத்தந்தி 3 Jun 2022 11:03 PM IST (Updated: 3 Jun 2022 11:23 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாநில, தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது

தேனி

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாநில, தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் தேனி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமியில் பயிற்சி பெற்று மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பயிற்சியாளர் ஆனந்தபாபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story