மது எடுப்பு விழா


மது எடுப்பு விழா
x

மது எடுப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே நெப்புகை கிராமத்தில் சூலபிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நெப்புகை, முள்ளிக்காய்பட்டி, வேலாடிப்பட்டி, உரியம்பட்டி, ஒத்த வீடு, பெரியமனை கொல்லை, சிவன் தான் பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த திரளான பெண்கள் தங்கள் வீடுகளில் கடந்த ஒரு வார காலமாக விரதம் இருந்து பூஜை செய்து வந்த மது குடங்களை தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக சூலபிடாரி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு குலவை போட்டு, கும்மி அடித்து, கோலாட்டம் ஆடி நல்ல மழை பெய்து விவசாயம் செழித்திடவும், உலக மக்களின் அமைதிக்காகவும் சூலப்பிடாரி அம்மனிடம் வேண்டிக் கொண்டனர். இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story