நாடியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா


நாடியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா
x

நாடியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆலங்குடி:

ஆலங்குடியில் உள்ள நாடியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி மது எடுப்பு விழா நடைபெற்றது. இதையடுத்து குடங்களில் தானியங்கள் வைத்து, அதில் தென்னம்பாளையை சொருகி மல்லிகைப் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் குலவையிட்டு, கும்மியடித்து மதுகுடங்களை தலையில் சுமந்து கொண்டு பெண்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவிலுக்கு நவதானியங்களை காணிக்கையாக கொடுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story