செல்லியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா


செல்லியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா
x

செல்லியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே கருக்காக்குறிச்சியில் செல்லியம்மன், அகோர வீரபத்திரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து மது எடுப்பு விழா நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் குடத்தில் தென்னம்பாலைகளை வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story