திருத்துறைப்பூண்டி-வேளாங்கண்ணி அகல ரெயில்பாதை பணிகள் விரைவுபடுத்தப்படுமா?


திருத்துறைப்பூண்டி-வேளாங்கண்ணி அகல ரெயில்பாதை பணிகள் விரைவுபடுத்தப்படுமா?
x

13 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வரும் திருத்துறைப்பூண்டி-வேளாங்கண்ணி இடையே அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

13 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வரும் திருத்துறைப்பூண்டி-வேளாங்கண்ணி இடையே அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி-வேளாங்கண்ணிக்கு அகல ரெயில் பாதை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை மாவட்டம் திருக்குவளை வழியாக வேளாங்கண்ணிக்கு அகல ெரயில் பாதை அமைக்க 2009-ம் ஆண்டு மத்திய ரெயில்வே நிலை குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. திட்ட மதிப்பீடு ரூ.132 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த பணிக்கு முதல் கட்டமாக ரூ.52 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டியில் இருந்து வேளாங்கண்ணிக்கு 33 கி.மீ. தூரம் அகல ரெயில்பாைத அமைக்கப்பட உள்ளது. மேலபிடாகை, சித்தாய்மூர், திருக்குவளை வழியாக ரெயில் பாதை அமைக்கப்படுகிறது.

ஆமை வேகத்தில் நடக்கும் பணி

இந்த அகல ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் இதுவரை 11 ஆற்றுபாலங்களும், 60 மதகு பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த 13 ஆண்டு களாக இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால். இன்னும் தண்டவாளம் அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை.

வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற மாதா பேராலயத்திற்கு கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அதிகம் வருவார்கள். தற்போது வேளாங்கண்ணிக்கு ரெயில்களில் மூலம் தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்து வருபவர்கள் திருத்துறைப்பூண்டிக்கு வந்து திருவாரூர் வழியாக நாகைக்கு சென்று அங்கிருந்து வேளாங்கண்ணிக்கு செல்கின்றனர்.

பயண நேரம் குறையும்

திருத்துறைப்பூண்டியில் இருந்து வேளாங்கண்ணிக்கு இந்த வழித்தடத்தில் கேரளா செல்லும் விரைவு ெரயில்களை இயக்கினால் 100 கிலோமீட்டர் தூரம் குறையும். இந்த வழித்தடத்தில் ரெயில் இயக்கப்பட்டால் நாகூர், நாகை, வேளாங்கண்ணி மக்கள் திருத்துறைப்பூண்டி, வழியாக முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை மதுரை, தென்காசி, செங்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளுக்கும், வெளி மாநிலமான கேரளாவிற்கும் செல்ல நேரம் மற்றும் கட்டணம் செலவும் குறையும்.

இந்த அகல ெரயில் பாதைப்பணியை விரைந்து முடித்து ரெயில் இயக்கினால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் பயன் அடைவார்கள் என ெரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உப்பு, காய்கறி ஏற்றி செல்லலாம்

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ெரயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் வக்கீல் நாகராஜன் கூறுகையில், கடந்த 13 ஆண்டுகளாக திருத்துறைப்பூண்டி- வேளாங்கண்ணி இடையே அகல ரெயில்பாதை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் ரெயில் இயக்கினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யத்தை இணைக்கும் வகையில் அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த வழித்தடத்தில் விரையில் ரெயில் இயக்கப்பட உள்ளதால் உப்பு மற்றும் வேதாரண்யத்தில் விளையும் காய்கறிகள், பூக்கள் எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும். எனவே மத்திய ரெயில்வே மந்திரி உடனடியாக நடவடிக்கை எடுத்து திருத்துறைப்பூண்டி-வேளாங்கண்ணி இடையே அகல ெரயில் பாதை பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

விரைந்து முடித்து ரெயில் இயக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் கமல் கூறுகையில், வேளாங்கண்ணியில் இருந்து திருக்குவளை வழியாக திருத்துறைப்பூண்டிக்கு ெரயில் பாதை ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு ெரயில் இயக்கினால் நேரமும், கட்டணமும் குறைய வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி விரைந்து பணியை முடித்து ரெயிலை இயக்க சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story