தென்கோவனூர் சாலை சீரமைக்கப்படுமா?


தென்கோவனூர் சாலை சீரமைக்கப்படுமா?
x

குண்டும்- குழியுமான தென்கோவனூர் சாலை சீரமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

குண்டும்- குழியுமான தென்கோவனூர் சாலை சீரமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

தென்கோவனூா் சாலை

கூத்தாநல்லூர் அருகே தென்கோவனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு இடையே இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், திருராமேஸ்வரம், முத்துப்பேட்டை, வடபாதிமங்கலம், திருமக்கோட்டை போன்ற முக்கிய ஊர்களுக்கு எளிதில் சென்று வரக்கூடிய வழித்தடம் என்பதால் இந்த சாலையை தென்கோவனூர், வடகோவனூர், வாக்கோட்டை, பண்டுதக்குடி, நன்னிமங்கலம், பழையகாக்கையாடி, தண்ணீர்குன்னம், ஓவர்ச்சேரி உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தார் சாலை

மேலும், இந்த சாலையில் கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர், பள்ளி வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. சாலையில் சில இடங்களில் கற்கள் அதிகளவில் சிதறிக் கிடக்கிறது.

மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சாலையில் சென்று வருவதற்கு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.

குறிப்பாக, மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே குண்டும்- குழியுமான தென்கோவனூர் சாலையை அகலமான தார்சாலையாக அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story