சன்னாநல்லூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?


சன்னாநல்லூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?
x

அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக்கிடப்பதால் சன்னாநல்லூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக்கிடப்பதால் சன்னாநல்லூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ரெயில்வே கேட்

திருமருகல் அருகே உள்ள சன்னாநல்லூரில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. ரெயில் நிலையம் அருகே ரெயில் கேட் அமைந்துள்ளது. இந்த வழித்தடம் வழியாக பல்வேறு ஊர்களுக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. மேலும் சரக்கு ரெயில்களும் சென்று வருகின்றன.

இந்த பகுதியில் ரெயில்கள் வரும் போது ரெயில்வே கேட் மூடப்படுவதால் கும்பகோணம்-நாகை நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதாலும், நீண்ட நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டு இருப்பதாலும் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்

இதன் காரணமாக சன்னாநல்லூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே சன்னாநல்லூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க ரெயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story