கொள்ளிடத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டித்தரப்படுமா?


கொள்ளிடத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டித்தரப்படுமா?
x

கொள்ளிடத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.

ரெயில்பாதை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திலிருந்து மாங்கனாம்பட்டு, ஆச்சாள்புரம், நல்லூர், கோதண்டபுரம், மகேந்திரபள்ளி, கொடக்காரமூலை, புதுப்பட்டினம், பழையாறு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் நெடுஞ் சாலையின் குறுக்கே கொள்ளிடம் ெரயில் நிலையம் அருகே ெரயில் பாதை செல்கிறது.இந்த நெடுஞ்சாலையில் செல்வோர்கள் இந்த ெரயில்வே பாதையை கடந்து தான் செல்ல வேண்டும். அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தினமும் இந்த வழித்தடத்தில் தான் சென்று வருகி்ன்றன. மாங்கானாம்பட்டு, நல்லூர், புதுப்பட்டினம் ஆகிய பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு செல்பவர்களும், பழையாறு மீன்பிடி துறைமுகத்திற்கு செல்பவர்களும் இந்த சாலைவழியே தான் சென்று வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் காத்திருப்பு

கொள்ளிடம், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் இந்த நெடுஞ்சாலை வழியே தான் வாகனங்களில் சென்று வருகின்றனர்.இந்த ெரயில் பாதையில் அடிக்கடி ெரயில்கள் செல்வதால் சாலையின் குறுக்கே ெரயில்கள் கடந்து செல்லும் வகையில் ெரயில்வே கேட் மூடப்பட்டு ெரயில் சென்ற உடனே திறக்கப்படுகிறது.ெரயில் வருவதற்கு பத்து நிமிடம் முன்பே கேட் மூடப்படுவதால் சாலையில் செல்பவர்கள் சில மணி நேரம் காத்திருந்து பிறகு ெரயில்வே கேட் திறக்கப்பட்ட பிறகு செல்கின்றனர். ெரயில் காலதாமதமாக வந்தால் மேலும் நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் காத்து நிற்கின்றனர்.இதனால் அவசரமாக செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வர முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இந்த ெரயில்பாதை சாலையை கடக்கும் இடத்தில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்

இதுகுறித்து கொள்ளிடத்தை சேர்ந்த ராமபிரபு கூறுகையில், கொள்ளிடம் ெரயில் நிலையம் அருகே நெடுஞ்சாலை குறுக்கே மேம்பாலம் கட்டுவதால் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவார்கள். ஆஸ்பத்திரிகளுக்கு செல்பவர்களும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், முதியோர்களும் பயனடைவார்கள். எனவே மத்திய, மாநில அரசுகள் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக ரெயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடத்தை சேர்ந்த ஜலபதி கூறுகையில், கொள்ளிடத்தில் இருந்து ெரயில்வே கேட்டை கடந்து 60-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். இந்த கொள்ளிடம் ெரயில்வே சாலையில் ெரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

மேலும் கொள்ளிடம் கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அவசர சிகிச்சை பிரிவுக்காக நல்லூர் மற்றும் கொள்ளிடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் ஆம்புலன்ஸ் சேவைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இப்பகுதி மக்களின் நிலையை அறிந்து மத்திய அரசு கொள்ளிடம் -மகேந்திரப்பள்ளி சாலையில் ெரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story