சேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா?


சேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா?
x

திருமருகல் அருகே சேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் அருகே சேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சேறும், சகதியுமான சாலை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவில் 75-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.இப்பகுதிக்கு செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது.

இந்த சாலை மழைக்காலங்களில் சேறும்,சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடுமாறி கீழே விழுகின்றனர்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ராஜ்குமார் கூறுகையில், ஏர்வாடி ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலை மண் சாலையாகவே உள்ளது.

இந்த சாலை வழியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செல்லும் லாரிகள், பள்ளி-கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. லேசாக மழை பெய்தால் கூட சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். போக்குவரத்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சீரமைக்க வேண்டும்

அப்பகுதியை சேர்ந்த சரிதா கூறுகையில், ஏர்வாடி ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மண்சாலை, மழை காலங்களில் ேசறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன்காரணமாக இந்த வழியாக முதியவர்கள் நடந்து செல்லும் போது தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சைக்கிளில் செல்லும் போது தடுமாறி கீழே விழுகின்றனர்.

இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குறைகளை சரி செய்து தர வேண்டும் என ஊராட்சி மன்றம் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.


Next Story