மகேந்திரப்பள்ளி - காட்டூர் சாலை சீரமைக்கப்படுமா?


மகேந்திரப்பள்ளி - காட்டூர் சாலை சீரமைக்கப்படுமா?
x

குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கும் மகேந்திரப்பள்ளி- காட்டூர் சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கும் மகேந்திரப்பள்ளி- காட்டூர் சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சேதமடைந்த சாலை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகேந்திரப்பள்ளி கிராமத்திலிருந்து காட்டூர் செல்லும் 400 மீட்டர் தூர தார் சாலை சீரமைக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிறது. இந்த சாலை மண் சாலையாக இருந்தது. பின்னர் தார் சாலையாக மாற்றப்பட்டது. அதற்கு பின்பு இந்த சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த சாலையில் உள்ள கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கிறது.

இந்த சாலையின் வழியே காட்டூருக்கு செல்லும் பள்ளி மாணவர்கள் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மிகவும் சிரமத்துடன் இந்த சாலையை கடந்து செல்கிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் இந்த சாலை வழியாக செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள்.

சீரமைக்க கோரிக்கை

குறிப்பாக மழைக்காலத்தில் இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் ேதங்கி போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்துகிறது.

மகேந்திரப்பள்ளி- காட்டூர் சாலையை சீரமைக்கக்கோரி பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை.

எனவே மகேந்திரப்பள்ளி காட்டூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களின் மக்கள் நலன் கருதி காட்டூர் செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story