கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா?


கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா?
x

கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கரூர்

'அனைத்து சாலைகளும் ரோமாபுரிக்கு இட்டுச்செல்கின்றன' என்ற சொல் வழக்கு உண்டு. அதுபோல கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் எல்லோருடைய பார்வையும் கர்நாடகாவை நோக்கியே இருந்தன.

காங்கிரஸ் ெவற்றி

கடந்த 10-ந் தேதி அங்கு வாக்குப்பதிவு நடந்தது. 13-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. கர்நாடகம் மிகவும் வித்தியாசமான முறையில் தேர்தல்களை சந்திக்கும் மாநிலமாகும். அங்கு ஒரு முறை பா.ஜ.க. வெற்றி பெற்றால், அடுத்த முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இந்த தேர்தலில் அந்த வரலாற்றை முறியடித்தே தீருவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் சபதம் எடுத்து பம்பரமாக சுழன்று தேர்தல் பணியாற்றினார்கள். காங்கிரசும் விட்டு வைக்கவில்லை. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் பம்பரமாக சுழன்று தேர்தல் பிரசாரம் செய்தனர். முடிவில் காங்கிரஸ் 136 இடங்களும், பா.ஜ.க. 65 இடங்களிலும் வெற்றி பெற்றன. 'எங்கள் தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது' என்று உறுதியாக நம்பிக்கொண்டு இருந்த மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது தான் மக்களின் எண்ண ஓட்டம்.

வரப்போகும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 'இதுதான் எதிரொலிக்கும் என்று எதிர்க்கட்சிகளும்', 'இல்லை, இல்லை மாநில தேர்தல்களின் முடிவுகள் மத்தியில் எதிரொலிக்க வாய்ப்பே இல்லை' என்று பா.ஜ.க. ஆதரவாளர்களும் உறுதியாக கூறுகிறார்கள்.

இந்தநிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? என்று அரசியல் கலப்பில்லாத மக்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-

மக்கள் மனநிலை

மத்திய ஜவுளித்துறையின் ஓய்வுபெற்ற அரசு செயலாளரும், தமிழக அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளில் பதவி வகித்தவருமான ஐ.ஏ.எஸ். அதிகாரி இரா.பூரணலிங்கம் கூறும்போது, 'கர்நாடக மாநிலத்தில் தற்போது நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் பெரும் வெற்றி பெற்று இருக்கிறது. மக்கள் நலன் கருதி கர்நாடக மாநிலத்தில் நல்ல ஆட்சியை அவர்கள் அளித்தால், 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இதே போன்ற வெற்றியை அவர்கள் பெற முடியும். ஒரே ஆண்டில் மக்களின் மனநிலை மாற வாய்ப்பு இல்லை. காங்கிரசின் இந்த எதிர்பாராத வெற்றி நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் இடையே ஒரு உற்சாகத்தை ஏறபடுத்தி உள்ளது. அதைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நாடாளுமன்றத்திலும் மாறுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களான உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் வசிக்கும் பொதுமக்களின் மனநிலையைப் பொறுத்தும் இது இருக்கிறது'

சங்கநாதம் ஒலித்துள்ளது

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளருமான இரா.கிறிஸ்துதாஸ் காந்தி கூறும்போது, 'கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்க வேண்டும். இந்திய நாட்டில் ஜனநாயகம் என்பது தனிநாயகமாக மாறி வருகிறது. ஆகவே இந்திய நாட்டில் யார் ஆட்சி பொறுப்புக்கு வந்தாலும், எந்த கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்தாலும் ஒரு 10 ஆண்டுகள் சுழற்சியில் கண்டிப்பாக ஒரு மாற்றம் வர வேண்டும். இல்லையென்றால் ஊறித்திழைத்த அரசியல்வாதிகளும், அவர்களது அரசு நிர்வாகத்தினரும் ஜனநாயத்தை சர்வாதிகார முறையில் மாற்றிக்கொண்டு விடுவார்கள்.

ஆகவே கண்டிப்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் மாற்றம் வேண்டும். அதேபோன்று மத்திய அரசின் ஆட்சி முறையை யாரும் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி, வடநாட்டினரின் சிந்தனையின் தொகுப்பாக அமைந்து வருகிறது. தென்னிந்திய அரசியலில் வடமாநிலங்களைவிட சற்று ஆறுதலான வகையில் ஜனநாயக பாங்கும், மதச்சார்பின்மையும், நாட்டு ஒற்றுமை உணர்வுகளும், கல்வி, பொருளாதார வளர்ச்சிகளும் சிறப்பாக இருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே இந்த நல்ல அரசியல் போக்கு, இந்திய அளவில் எதிரொலிப்பதற்கு இந்த கர்நாடக தேர்தல் ஒரு சங்கநாதமாக ஒலித்து உள்ளது. கர்நாடகவில் நடந்துள்ள மாற்றம் இந்திய அளவில் நடக்க வேண்டும் என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது'

ஒரே மாதியாக இருக்காது

தாந்தோணி மலையை சேர்ந்த சந்திரசேகர் கூறுகையில்.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது வரவேற்கதக்க ஒன்றாகும். இந்த முடிவு நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கும் என்று சொல்லி விட முடியாது. ஏனெனில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் முடிவு என்பது ஒரே மாதியாக இருக்காது.

அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஒவ்வொரு மாநில மக்களுக்கும் அவர்களின் எதிர்பார்ப்பு, கொள்கைகள் வேறு வேராக இருக்கும். இந்த கர்நாடக தேர்தல் முடிவை வைத்து நாடாளுமன்ற தேர்தல் முடிவை சொல்ல முடியாது. தேர்தல் சமயத்தில் மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் அதன்படி தான் மத்தியில் ஆட்சி அமையும்.

வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை

ஜெகதாபியை சேர்ந்த குடும்ப தலைவர் பூபதி:-

கர்நாடக தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்க வேண்டும் என்பதே என் போன்றவர்களின் விருப்பமாகும். ஒரே கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் போது சர்வாதிகார மனப்பான்மை வந்து விடுகிறது.

இன்றைய ஆளுங்கட்சி முன்பு எதிர்க்கட்சியாக இருந்த போது சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தி தாங்கள் மக்களோடு இருப்பதாக காட்டி கொண்டனர். தேர்தலில் வெல்வதற்காக பிரச்சாரம் செய்த வாக்குறுதிகள் பலவும் நிறைவேற்றபடாமல் உள்ளது. இதையெல்லாம் கவனித்து கொண்டிருக்கும் மக்கள் கண்டிப்பாக மாற்றத்தை தான் விரும்புவார்கள்.

மாற்று அரசு உருவாகும்

மண்மங்கலத்தை சேர்ந்த குடும்பதலைவி வெங்கடேஸ்வரி:-

மக்களுக்கு நல்லது செய்வதற்காக அரசு அமைய வேண்டும். அப்படி அமையும் அரசே நல்ல ஜனநாயக அரசாகும். ஏழை பெண்களின் வாழ்வு மலர வேண்டும். அவா்களின் தேவைகள் பூர்த்தியாக வேண்டும். குடும்ப தேவைக்கான கியாஸ் விலை குறையவே வில்லை. இதே நிலையில் இருப்பதால், கர்நாடக தேர்தல் முடிவு மாற்றத்தை ஏற்படுத்தியது. அதேபோல் வருகிற நாடாளுமன்ற ேதர்தலிலும் கண்டிப்பாக மாற்றம் இருக்கும். இதனால் மாற்று அரசு மத்தியில் உருவாகுவது நிச்சயம். ஒரு நல்ல ஜனநாயக அரசாக அமைய வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும்.

தினமும் விலை உயர்வு

வேட்டமங்கலத்தை சேர்ந்த சுப்பிரமணியன்:-

கர்நாடக ேதா்தல் முடிவு என்பது கண்டிப்பாக வருகிற நாடாளுமன்ற ேதா்தலில் பிரதிபலிக்கும். ஜி.எஸ்.டி.வரி மூலம் அனைத்து பொருட்களின் விலைகளும் ஏறிவிட்டது. இதனால் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து தினமும் உயர்ந்து கொண்டே ேபாகிறது. இந்தியாவில் தான் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே கா்நாடக ேதா்தல் முடிவு என்பவது ஒரு மாற்றத்திற்கான முடிவாக தான் நான் பார்க்கிேறன்.

மாற்றத்ைத ஏற்படுத்தும்

மேலவெளியூரை சேர்ந்த ஜெகநாதன்:-

கர்நாடக தேர்தல் முடிவு வரும் நாடாளுமன்ற ேதா்தலில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. விவசாயிகளுக்கு இந்த அரசு எந்த ஒரு நன்மைகளையும் செய்யவில்லை.

விவசாயிகளுக்கு 3 மாதத்திற்கு ஒருமுறை வழங்கி வழங்கி வந்த ரூ.2 ஆயிரத்ைத நிறுத்தி விட்டனர். இதுவும் வருகிறன்ற நாடாளுமன்ற ேதா்தலில் ஒரு மாற்றத்ைத ஏற்படுத்தும்.

பிரதிபலிக்கும்

குளித்தலையை சேர்ந்த கல்லூரி மாணவர் கார்த்திகேயன்:-

கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ெவற்றி நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக பிரதிபலிக்கும். இதனால் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு இது அடித்தளமாக இருக்க வாய்ப்புள்ளது.

நீட் தேர்வு தடை செய்யாமல் இருப்பது தற்ேேதுள்ள அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அனைத்து மாநில மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story