சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?


சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?
x

திருமருகல் அருகே புதர்மண்டி காட்சி அளிக்கும் சுகாதார வளாகம் சீரமைப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் அருகே புதர்மண்டி காட்சி அளிக்கும் சுகாதார வளாகம் சீரமைப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சுகாதார வளாகம்

திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி வடக்கு ஆதிதிராவிடர் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் நலன் கருதி மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக சுகாதார வளாகம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் சுகாதார வளாகத்தின் பின்புறம் போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போர்வெலில் உள்ள மோட்டாரை மர்மநபர்கள் திருடி சென்றதாக தெரிகிறது. இதனால் சுகாதார நிலையத்தில் தண்ணீர் வரவில்லை.

தொற்றுநோய் பரவும் அபாயம்

சுகாதார வளாகத்தை சுற்றி கருவேல மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சி அளிக்கிறது. இதனால் சுகாதார வளாகத்தின் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், அந்த பகுதி மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்க வேண்டிய அவலம் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதர்மண்டி காட்சி அளிக்கும் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story