மழைக்காலத்திற்கு முன்பு தரைப்பாலம் முழுமையாக சீரமைக்கப்படுமா?
சாத்தூர் அருகே மழைக்காலத்திற்கு முன்பு தரைப்பாலம் முழுமையாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர் அருகே மழைக்காலத்திற்கு முன்பு தரைப்பாலம் முழுமையாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரைப்பாலம்
சாத்தூர் அருகே நென்மேனி கிராமத்தில் இருந்து வன்னிமடை உள்ளிட்ட பல கிராமங்களுக்கு செல்ல வசதியாக வைப்பாற்றில் தரைப்பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
இதையடுத்து மழையின் காரணமாக வைப்பாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆற்றின் உள்ளே இறங்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வாறு இல்லை என்றால். பல கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைமை பொதுமக்களுக்கு ஏற்பட்டது.
சீரமைக்க கோரிக்கை
அதிலும் குறிப்பாக பள்ளி செல்லும் மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதையடுத்து தற்போது இந்த பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பாலம் எத்தனை நாளைக்கு உறுதியாக இருக்கும் என தெரியாது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சேதமடைந்த பாலத்தில் மக்கள் அச்சத்துடன் பயணிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
எனவே அந்த பகுதி பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சேதமடைந்த இந்த தரைப்பாலத்தை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இதேபகுதியில் வேறு புதிய பாலத்தை அமைத்துத் தர வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.