ஆபத்தான பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா?
செம்பனார்கோவில் அருகே ஆபத்தான பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பொறையாறு:
செம்பனார்கோவில் அருகே ஆபத்தான பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சுற்றுலா தலம்
தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பூம்புகார் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
மேலும் கீழப்பெரும்பள்ளம் கேது கோவில், திருவெண்காடு புதன் கோவில் மற்றும் அங்கு உள்ள பஞ்ச நரசிம்மர் கோவில்களுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில் பஸ், கார், சுற்றுலா வேன் அதிக அளவில் சென்று வருகின்றன.
சேதமடைந்த பயணிகள் நிழலகம்
இந்த நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் செம்பனார்கோவில் அருகே பொன்செய் கிராமத்தில் உள்ள பயணிகள் நிழலகம் சேதமடைந்து காணப்படுகிறது. பயணிகள் நிழலக கட்டிடத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இந்த, கட்டிடம் இடிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில், இங்கு யாரும் நின்று பஸ்சில் ஏறி செல்வதில்லை.
சீரமைக்க வேண்டும்
பயணிகள் அமரும் சிமெண்டு இருக்கைகள் உடைந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படும் பயணிகள் நிழலகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.