நொய்யல் பகுதியில் பாலங்கள் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?
நொய்யல் பகுதியில் பாலங்கள் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா? என வாகன ஓட்டிகள்-பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
குடிநீர் வினியோகம் நிறுத்தம்
கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்கு சாலை முதல் வேலாயுதம்பாளையம் வரை தார் சாலையின் இருபுறமும் சாலை அமைப்பதற்கான விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை க.பரமத்தி அருகே உள்ள ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனம் கடந்த சுமார் 2 மாதத்திற்கும் மேலாக செய்து வருகிறது.
இந்நிலையில் வேட்டமங்கலம் ஊராட்சி, கோம்புப் பாளையம் ஊராட்சிகளில் குடியிருக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு தார் சாலையின் இருபுறமும் குடியிருக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக தார் சாலையில் இருபுறமும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தார் சாலையில் இருபுறமும் சுமார் 3 அடி நீளமும் ,3அடி ஆழத்திற்கும் சாலை விரிவாக்க பணிக்காக குழிகள் பறிக்கப்பட்டு வந்ததால் தார் சாலையின் இருபுறமும் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடிநீர் குழாய்கள் நெடுகிலும் நொறுங்கி சேதம் அடைந்து விட்டது. இதன் காரணமாக தார் சாலை ஓரத்தில் இருபுறமும் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு கடந்த 2 மாதத்திற்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஏராளமான குடியிருப்பு வாசிகள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
குண்டும், குழியுமான சாலை
அதேபோல் நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் முத்தனூரில் இருந்து புங்கோடை வரை நான்கு இடங்களில் தார் சாலையின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் பாலம் அமைக்கும் பணி முடிவடையவில்லை. தார் சாலை அமைக்கும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது. பாலம் அமைக்கும் பணிக்காக பாலம் அருகே மண் சாலை அமைக்கப்பட்டு அந்த மண்சாலை வழியாக அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. மண்சாலை மிகவும் குண்டும் ,குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக சென்று கொண்டிருக்கும் தனியார் மற்றும் அரசு பஸ்கள், இருசக்கர வாகனம், டிராக்டர்கள் என அனைத்து வாகன ஓட்டிகளும் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
மாற்றுவழியில் செல்கிறது
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இந்த சாலை வழியாக எந்த வாகனங்களும் செல்லாதவாறு கந்தம்பாளையம் பகுதியிலும், நொய்யல் குறுக்கு ச்சாலை பகுதிகளும் தார் சாலையின் குறுக்கே தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் அனைத்து தனியார் மற்றும் அரசு பஸ்கள், லாரிகள் அனைத்தும் நொய்யல் குறுக்கு சாலையில் இருந்து புன்னம் சத்திரம் வழியாக வேலாயுதம்பாளையம் வழியாக பரமத்தி வேலூர், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் பகுதிகளுக்கு செல்கிறது. அதேபோல் சேலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு பகுதியில் இருந்து கொடுமுடி, ஈரோடு ,வெள்ளகோவில், முத்தூர், பல்லடம், காங்கயம், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள் என அனைத்து வாகனங்களும் வேலாயுதம்பாளையம், புன்னம்சத்திரம் , நொய்யல் குறுக்கு சாலை வழியாக செல்கிறது.
பொதுமக்கள் கோரிக்கை
இந்நிலையில் வேலாயுதம்பாளையத்தில் இருந்து கரைப்பாளையம், நடையனூர், முத்தனூர், சேமங்கி, புங்கோடை, நொய்யல் வழியாக எந்த பேருந்துகளும் செல்வதில்லை.இந்த வழியாக பஸ்கள் செல்லாததால் இந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து மூலம் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். பேருந்துகள் வராதால் பேருந்துகளுக்கு செல்வதற்கு இந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் நீண்ட தூரம் உள்ள நொய்யல் குறுக்கு சாலைக்கும் அல்லது வேலாயுதம்பாளையம் பகுதிக்கும் சென்று பஸ்சில் ஏறி செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
நெடுகிலும் பாலம் அமைப்பின் பணி மோசமான தார் சாலை இந்நிலையில் பேருந்துகள் செல்ல முடியாத நிலை எதனால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைக்கும் பணி மற்றும் பாலம் அமைக்க பணியை விரைந்து முடித்து அனைத்து பஸ்களும் வேலாயுதம் பாளையத்தில் இருந்து நொய்யல் வழியாக (சுமார் 10 கிலோமீட்டர் தூரம்) செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்விவரம் பின்வருமாறு:-
குடிநீா் வழங்க ேவண்டும்
புங்கோடை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி:-
புங்கோடையிலிருந்து சொட்டையூர் வரை தற்ேபாது சாரை விரிவாக்கப்பணியும், தார் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சாலை விரிவாக்கம் அமைப்பதற்கு குழி பறித்த போது குடிநீர் குழாய்களை உடைத்து விட்டனர். இதனால் நெடுகிலும் உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவது தடைப்பட்டு விட்டது.
பின்னர் பறிக்கப்பட்ட குழியை நிரப்பியும் விட்டனர்.அதனால் குடிநீர் குழாய் பதிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. தார் சாலை அமைத்து முடிக்கும் வரை குடிநீர் குழாயை பதிக்க முடியாத நிலையில் ஊராட்சி நிர்வாகத்தினர் உள்ளனர். எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
முத்தனூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார்:-
கடந்த மூன்று மாதமாக சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அதே போல் முத்தனூரில் இருந்து புங்கோடை வரை 4 பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் மந்தமாக நடைபெறுகிறது. சாலை விரிவாக்க பணியின் போது பாலம் அமைக்க மண் சாலை போடப்பட்டுள்ளது. இதனால் மண்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. நான் மோட்டார் சைக்கிளில் நாமக்கல்லுக்கு வேலைக்கு சென்று இரவில் வரும்போது குழிகள் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி வாகனத்தை ஓட்டி வருகிறேன். சில நேரங்களில் பாலம் கட்டும் இடம் தெரியாமல் இட்டாக உள்ளது. இதனால் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலம் கட்டும் இடங்களில் மின்விளக்கு அமைத்து ஆபத்தான இடம் என்ற பெயர் பலகையை வைத்து விபத்தினை தடுக்க வேண்டும்.
பஸ்கள் வருவதில்ைல
மரவாபாளையம் பகுதியை சேர்ந்த நந்தகுமார்:-
நொய்யல் வழியாக கொடுமுடி, ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், அதே போல் பரமத்தி வேலூர், நாமக்கல், சேலம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், டவுன் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலை விரிவாக்க பணி, பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் கடந்த ஒரு வாரமாக இந்த வழியாக வரும் அனைத்து பஸ்களையும் செல்லாதவாறு இரு புறமும் அடைத்துவிட்டனர். இதனால் எந்த பஸ்களும் இந்த வழியாக வருவதில்லை. இதனால் ெபாதுமக்கள் வெளியூர்களுக்கு சென்று வருவதற்கும், அவசரமாக செல்ல வேண்டிய வேலைக்கும் கூட செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மரங்களை அகற்றி விட்டனா்
நொய்யல் பகுதியை சேர்ந்த பசுபதி:-
நொய்யல் குறுக்குச்சாலை முதல் கந்தம்பாளையம் வரை சாலையின் இருபுறமும் விரிவாக்கம் செய்து சேதமடைந்த சாலையை சீரமைக்க உள்ளனர். அதேபோல் 4 பழுதடைந்த பாலங்களை அகற்றிவிட்டு புதிய பாலங்கள் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. ேமலும் சாலையின் இருபுறமும் இருந்த மரங்களை அகற்றி விட்டார்கள்.
குடிநீர் குழாய்களை உடைத்து விட்டனர். மீண்டும் புதிய குழாய்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாமல் செய்து விட்டனர். எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதி பொதுமக்களுக்கு உதவ வேண்டும்.
பொதுமக்கள் அவதி
முத்தனூர் பகுதியை சேர்ந்த சுதா:-
முத்தனூர் வழியாக செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆனதன் காரணமாக மிகவும் பழுதடைந்து இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத சூழ்நிலையில் இருந்தது. இந்நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் வேண்டுகோளை அடுத்து தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலையை அகலப்படுத்துவதற்காக சாலையின் இருபுறமும் குழி பறித்தனர். அப்போது இருபுறமும் இருந்த குடிநீர் குழாயை உடைத்து விட்டனர்.
இதனால் வேட்டமங்கலம், கோம்புப் பாளையம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் குடிநீருக்கு மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவா்கள் கூறினார்.