இடிந்து விழுந்த வாய்க்கால் பாலம் தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா?


இடிந்து விழுந்த வாய்க்கால் பாலம் தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா?
x

இடிந்து விழுந்த வாய்க்கால் பாலம் தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா?

நாகப்பட்டினம்

ஆழியூரில் இடிந்து விழு ந்த வாய்க்கால் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

இடிந்து விழுந்த தடுப்பு சுவர்

நாகை மாவட்டம் ஆழியூர் ஊராட்சியில் சைக்கிள் கம்பெனி பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகில் கீழ்வேளூர் ஓடம் போக்கி ஆற்றில் இருந்து பிரிந்து வரும் கடம்பர வாழ்க்கை பாசன வாய்க்கால் நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே செல்கிறது. சாலையின் ஓரமாக தெற்கு பகுதியில் இருந்த வாய்க்கால் பாலம் தடுப்பு சுவர் இடிந்து பல மாதங்களுக்கு மேல் ஆகிறது.

தஞ்சை, திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி செல்பவர்கள், வியாபாரிகள், பஸ், லாரி, கார் மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்டவைகள் தினமும் இந்த வாய்க்கால் பாலம் வழியாக தான் சென்று வருகின்றனர். அப்போது தடுப்பு சுவர் இடிந்தது தெரியாமல் வாய்க்காலில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

சீரமைக்க வேண்டும்

இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் கடம்பர வாழ்க்கை பாசன வாய்க்காலில் இடிந்து விழுந்த தடுப்பு சுவரை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story