கூட்டணி கைகூடுமா? - தே.மு.தி.க. - அ.தி.மு.க. இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது


கூட்டணி கைகூடுமா? - தே.மு.தி.க. - அ.தி.மு.க. இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது
x

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. - அ.தி.மு.க. இடையே பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. இதில், அ.தி.மு.க. சார்பில் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா உடன் அ.தி.மு.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி. அன்பழகன், பெஞ்சமின் உள்ளிட்ட அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், சென்னை சாலி கிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் பிரேமலதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தே.மு.தி.க. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அண்மையில் நடந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. தே.மு.தி.க.வுக்கு மக்களவை 4, மாநிலங்களவை ஒரு தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேச்சுவார்த்தைக்கு பின்னரே முடிவு என்ன என்பது தெரியவரும்.


Next Story