'ஆன்மிக சிந்தனையை தேசிய அளவில் கொண்டு செல்வேன்' - மிஸ் யூனிவர்ஸ் இந்தியா போட்டிக்கு தேர்வான கோவை பெண்


ஆன்மிக சிந்தனையை தேசிய அளவில் கொண்டு செல்வேன் - மிஸ் யூனிவர்ஸ் இந்தியா போட்டிக்கு தேர்வான கோவை பெண்
x

மிஸ் யூனிவர்ஸ் இந்தியா போட்டிக்கு தேர்வானது மகிழ்ச்சி அளிப்பதாக கோவையை சேர்ந்த இளம்பெண் புவனேஷ்வரி தெரிவித்துள்ளார்.

கோவை,

சென்னையில் நடைபெற்ற 'மிஸ் யூனிவர்ஸ் தமிழ்நாடு' போட்டியில் தேர்வான கோவையைச் சேர்ந்த இளம்பெண் புவனேஷ்வரி, வைல்ட் கார்டு சுற்று மூலம் 'மிஸ் யூனிவர்ஸ் இந்தியா' போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதையடுத்து அவர் கோவை ஈஷா மையத்திற்கு வருகை தந்து தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புவனேஷ்வரி, மிஸ் யூனிவர்ஸ் இந்தியா போட்டிக்கு தேர்வானது மகிழ்ச்சியான தருணம் எனவும், ஆன்மிக சிந்தனை தேசிய அளவில் கொண்டு செல்வேன் எனவும் தெரிவித்தார்.

ஆன்மிக சிந்தனை தற்போது உலகிற்கு மிகவும் அடிப்படை தேவையாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். மேலும், பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு சுயஒழுக்கத்தை கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.


Next Story