மணல் லாரிகளால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா?


மணல் லாரிகளால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா?
x

கொள்ளிடம் அருகே அமைக்கப்பட்ட ஒரே மாதத்தில்மணல் லாரிகளால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே அமைக்கப்பட்ட ஒரே மாதத்தில்மணல் லாரிகளால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

சேதமடைந்த சாலைகள்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சியில் இருவக்கொல்லை கிராமத்தில் இருந்து தாண்டவன்குளம் கிராமம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு செல்லும் சாலை உள்ளது. கேவரோடை கிராமத்தில் இருந்து தொடுவாய் கிராமத்திற்கு செல்லும் 2 கிலோமீட்டர் தூர சாலை உள்ளது.

இந்த சாலைகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தார்ச்சாலையாக அமைக்கப்பட்டது.இந்த சாலை வழியாக தினமும் மணல் லாரிகள் அதிகம் சென்று வருகின்றன. இதனால் சாலை அமைக்கப்பட்ட ஒரே மாதத்தில் ஜல்லிகற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்து காணப்படுகிறது.

தடுமாறி கீழே விழுகின்றனர்

இதன் காரணமாக இந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் சைக்கிளில் செல்லும் போது சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்களால் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைக்கின்றனர்.

இந்த சாலை சேதமடைந்துள்ளதால் கூழையார், தொடுவாய், பழையார், தாண்டவன்குளம், இருவக்கொல்லை, ஜீவாநகர் உள்ளிட்ட கிராம பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மற்றும் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணல் லாரிகள் சென்றதால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும், இந்த வழியாக அதிகம் லாரிகள் செல்லவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story