வடபாதிமங்கலத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தரப்படுமா?


வடபாதிமங்கலத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தரப்படுமா?
x

வடபாதிமங்கலத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தரப்படுமா?

திருவாரூர்

கூத்தாநல்லூர்

வடபாதிமங்கலத்தில் சேதமடைந்து பூட்டியே கிடக்கும் பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு உயர்நிலைப்பள்ளி

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வடபாதிமங்கலம், பூசங்குடி, மாயனூர், புனவாசல், உச்சுவாடி, சோலாட்சி, அன்னுகுடி, குலமாணிக்கம், அரிச்சந்திரபுரம், கிளியனூர், மாதாகோவில்கோம்பூர், ஓகைப்பேரையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கிராமப்புற மக்கள் படித்து வருகின்றனர்.

பூட்டியே கிடக்கும் கட்டிடம்

இந்தநிலையில் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் இந்த பள்ளியில் இல்லாமல் இருந்து வருகிறது. ஒரு சில கட்டிடங்கள் மட்டுமே இருப்பதால் மாணவர்கள் சவுகரியமாக படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை குறைவாக உள்ளது. போதிய கட்டிட வசதிகள் இல்லாமல் உள்ளதால் மரத்தடியில் வைத்து வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தற்போது இந்த பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடம் சேதமடைந்து விரிசல்கள் ஏற்பட்டு பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதனால் மாணவர்கள் போதிய இட வசதி இல்லாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.

புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தரப்படுமா?

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடபாதிமங்கலத்தில் சேதமடைந்து பூட்டியே கிடக்கும் பள்ளி கட்டிடத்தை அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிய பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கிராமமக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story