ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பு சுவர் கட்டித்தரப்படுமா?


ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பு சுவர் கட்டித்தரப்படுமா?
x

ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பு சுவர் கட்டித்தரப்படுமா?

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே பண்டுதக்குடியில் ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ேசதமடைந்த தடுப்பு சுவர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள பண்டுதக்குடி என்ற இடத்தில் அந்த பகுதி விவசாயிகளின் பயன்பாட்டிற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணாற்றின் குறுக்கே தடுப்பு சுவர் கட்டப்பட்டது. இந்த தடுப்பு சுவர் மூலம் ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை தேக்கி வைத்து, தடுப்பு சுவரையொட்டி உள்ள பாசன வாய்க்கால் மூலம் தண்ணீரை அந்த பகுதி விவசாயிகள் அந்த பகுதியில் உள்ள வயல்களுக்கு கொண்டு சென்று உழவு பணிகள் மேற்கொண்டு நெல், உளுந்து, பயறு, பருத்தி போன்ற பயிர்களை ஒவ்வொரு ஆண்டும் சாகுபடி செய்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக பண்டுதக்குடி என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பு சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக, தடுப்பு சுவர் தளம் இடிந்து விழுந்து பள்ளம் ஏற்பட்டு அதன் வழியாக தண்ணீர் தேங்கி நிற்காமல் சென்று விடுகிறது. இதனால் பாசன வாய்க்கால் மூலம் போதிய அளவில் தண்ணீர் செல்லாததால் அந்த பகுதி விவசாயிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே ேசதமடைந்த தடுப்பு சுவரை அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் சிரமம்

இதுகுறித்து கூத்தாநல்லூர் விவசாயி காளிதாஸ் கூறுகையில் பண்டுதக்குடி என்ற இடத்தில் வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை பாசன வாய்க்கால் மூலம் கொண்டு சென்று சாகுபடி பணிகளை செய்வதற்காகவே வெண்ணாற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பு சுவர் கட்டப்பட்டது. இதனால் போதுமான அளவில் தண்ணீர் தேங்கியதால் 250-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்பு சுவர் சேதமடைந்து அதில் பள்ளம் ஏற்பட்டு தற்போது வரை தண்ணீர் தேங்கி நிற்காமல் சென்று விடுகிறது. இதனால் போதுமான அளவில் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் பாசன வாய்க்கால் மூலம் வயல்களுக்கு செல்வதில்லை. இதனால், கடந்த 8 ஆண்டுகளாக விவசாயிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். பயிர்கள் வாடிப்போகாமல் இருக்க, ஆற்றில் தண்ணீர் வரும் நேரங்களில் கூட பம்புசெட் அமைத்து வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பாதிப்பு அடைகின்றனர். அதனால், நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதும், உடனடியாக நடவடிக்கை எடுத்து சேதடைந்த தடுப்பு சுவரை அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக தடுப்பு சுவர் கட்டித்தர விரைவாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

புதிதாக தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்

இதுகுறித்து கூத்தாநல்லூர் விவசாயி முருகேசன் கூறுகையில், பண்டுதக்குடி மற்றும் நாகங்குடி பகுதியில் உள்ள வயல்களுக்கு, வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு செல்வதற்காகவே பண்டுதக்குடி என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே தடுப்பு சுவர் கட்டப்பட்டது. ஆனால், தடுப்பு சுவர் சேதமடைந்து பல ஆண்டுகள் ஆகியும் அதனை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், தற்போது, தடுப்பு சுவர் முழுமையாகவே சேதமடைந்து விட்டது. இதனால், தண்ணீர் தேங்கி நிற்க வேண்டிய இடத்தில் முழுவதும் தண்ணீர் தேக்கம் இல்லாமல் போய் விட்டது.

தண்ணீர் தேக்கம் இல்லாத காரணத்தால் பாசன வாய்க்காலுக்கு தேவையான தண்ணீர் செல்வதில்லை. இதனால், பல ஆண்டுகளாக சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை அடைந்து வருகின்றனர். தடுப்பு சுவர் இருந்தும், பாசன வாய்க்கால் இருந்தும், சாகுபடி செய்வதற்கான போதிய தண்ணீர் கிடைக்காத அவலநிலை பல ஆண்டுகளாக உள்ளது. இது தொடர்பாக பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே சேதமடைந்த தடுப்பு சுவரை அகற்றி விட்டு புதிதாக தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும் என்றார்.


Next Story