எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக குறிப்பிட்டு மீண்டும் கடிதம் அனுப்பப்படுமா ? தேர்தல் அதிகாரி பதில்


எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக குறிப்பிட்டு மீண்டும் கடிதம் அனுப்பப்படுமா ? தேர்தல் அதிகாரி பதில்
x

எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக குறிப்பிட்டு மீண்டும் கடிதம் அனுப்பப்படுமா ? என்ற கேள்விக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில் அளித்து உள்ளார்.

சென்னை

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.3.15 கோடி பெண் வாக்காளர்கள், 3.04 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளனர்.மற்றும் 8027 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். இவர்களில் 3.82 கோடி வாக்காளர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

தமிழகத்தில் வழக்கம்போல் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் அதிக வாக்காளர்கள் உள்ளனர்; துறைமுகம் தொகுதியில் குறைந்த அளவில் வாக்காளர்கள் உள்ளனர்.அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.66 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக சென்னை துறைமுகம் தொகுதியில் 1.70 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.

இதுவரை 60 சதவீத வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் கொடுத்த முகவரியின் அடிப்படையிலேயே அ.தி.மு.க.வுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.அதிமுகவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியின் அடிப்படையில் கடிதம் அனுப்பப்பட்டது. தேர்தல் ஆணையம் கொடுத்த முகவரியின் அடிப்படையிலேயே அதிமுகவிற்கு மெசஞ்சர் மூலமாகவும் தபால் மூலமாகவும் தகவல் அனுப்பப்பட்டது. அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த தகவலையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து விட்டோம்.

அ.திமு.க விவகாரத்தில் தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் செயல்பட முடியும்.

அதன் பிறகு தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை இவ்வாறு அவர் கூறினார்.


Next Story