ரேஷன் கடையை உடைத்த காட்டுயானைகள்


ரேஷன் கடையை உடைத்த காட்டுயானைகள்
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் ரேஷன் கடையை காட்டுயானைகள் உடைத்தன.

கோயம்புத்தூர்

வால்பாறை

அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் ரேஷன் கடையை காட்டுயானைகள் உடைத்தன.

காட்டுயானைகள்

வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் ரேஷன் கடைகளில் தேவைக்கு அதிகமாக அரிசியை இருப்பில் வைக்க வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். எனினும் காட்டுயானைகள் அட்டகாசம் தொடர்ந்து கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் வால்பாறை அருகில் உள்ள அய்யர்பாடி எஸ்டேட் ரோப்வே பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதிக்குள் நுழைந்த 10-க்கும் மேற்ப்பட்ட காட்டு யானைகள், அங்குள்ள மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடையின் சுவரை உடைத்தன. மேலும் துதிக்கையை உள்ளே விட்டு அரிசியை எடுத்து தின்றதோடு மூட்டைகளை வனப்பகுதிக்குள் தூக்கி சென்றன.

கண்காணிப்பு பணி

இதை அறிந்ததும் எஸ்டேட் தொழிலாளர்களும், வனத்துறையினரும் இணைந்து கூச்சலிட்டும், வாகனங்களில் சைரன் ஒலிக்க செய்தும் காட்டு யானைகளை விரட்டி விட்டனர். அவை குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இதனால் மீண்டும் காட்டுயானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுமோ என்ற அச்சத்துடன் தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். இதனால் வால்பாறை வனச்சரக வனத்துறையினர் தொடர்ந்து அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story