டேன்டீ கட்டிடத்தை உடைத்த காட்டு யானைகள்


டேன்டீ கட்டிடத்தை உடைத்த காட்டு யானைகள்
x
தினத்தந்தி 28 Aug 2023 11:00 PM (Updated: 28 Aug 2023 11:00 PM)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே டேன்டீ கட்டிடத்தை உடைத்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே தேவாலா டேன்டீ ரேஞ்ச் எண்.4, கரியசோலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி குடியிருப்புக்குள் புகுந்து தொழிலாளர்கள், மக்களை துரத்தி வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கரியசோலை, தேவாலா டேன்டீ ரேஞ்ச் எண்.4 பகுதிகளுக்குள் குட்டிகளுடன் காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் தேவாலா-நெலாக்கோட்டை சாலையில் வாகனங்களை வழிமறித்தன. அங்கு டேன்டீ தொழிலாளர்கள் பச்சை தேயிலை எடை போடும் கட்டிடத்தின் சுவரை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் சஞ்சீவி, வனகாப்பாளர் தம்பகுமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து யானைகளை விரட்டினர். இதேபோல் பந்தலூரில் இருந்து சேரம்பாடி வழியாக கோழிக்கோடு செல்லும் சாலையில் எலியாஸ் கடை பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டன. பின்னர் சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த், வனகாப்பாளர் ஞானமூர்த்தி உள்ளிட்டோர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


Next Story