குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானைகள்


குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானைகள்
x
தினத்தந்தி 16 Jun 2023 10:15 PM (Updated: 16 Jun 2023 10:15 PM)
t-max-icont-min-icon

குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானைகளால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் தாலுகா நாடுகாணி அருகே பொன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டு உள்ளன. தொடர்ந்து பொன்வயல், பாண்டியாறு டேன்டீ, நாடுகாணி ஆகிய பகுதிகளில் உள்ள தொழிலாளர் குடியிருப்புகளை இரவில் முற்றுகையிட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்கிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் காட்டு யானைகள் கூட்டம் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறை தரப்பில் கூறும்போது, காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.


Next Story